மட்டக்களப்பு கசிப்பு ஒழிப்பு : 80 லிட்டர் கசிப்பு கைப்பற்று – 4 பேர் தப்பியோடம் !
இதில் இரு தகர வரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 லீற்றர் கசிப்பு
கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
ஆனால், சுற்றிவளைப்பின் போதுஇரு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்ற நான்கு சந்தேக நபர்கள் இன்னும் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை.
அவர்கள் அனைவரும் மாவடிவேம்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.தற்போது பொலிஸார் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த சில வாரங்களாக சித்தாண்டி, மாவடிவேம்பு, ஈரளக்குளம் ஆகிய பகுதிகளில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால்,சந்திவெளி மற்றும் ஏறாவூர் பொலிஸார் இணைந்து தொடர்ச்சியான சுற்றிவலைப்பு நடத்தி வரும் நிலையில் இந்த கைப்பற்றலும் இடம்பெற்றுள்ளது.கைப்பற்றப்பட்ட கசிப்பும் உபகரணங்களும் நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வருங்காலத்திலும் இத்தகைய சட்டவிரோத கசிப்பு மையங்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரிவுகள் அறிவித்துள்ளன.
No comments: