News Just In

11/17/2025 09:13:00 AM

சாணக்கியன் நடவடிக்கையினால் திருகோணமலை விகாரைக் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளது.

சாணக்கியன் நடவடிக்கையினால் திருகோணமலைவிகாரைக் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளது.



இலங்கையின் திருகோணமலை பகுதியில் எந்த வித அனுமதிகளும் இன்றி புதிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்படுவதாக தகவல் வெளியாகியது. நேற்று காலை திருகோணமலை கடற்கரைக்கு வந்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கினர்.

கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏற்கனவே காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். மக்கள் சட்டம் நடைமுறைக்கு வரும் என நம்புகின்றனர். எனினும், அங்கிருந்து கிடைக்கப்பெற்ற வீடியோ பதிவுகள், ஒரு காவல்துறை அதிகாரி போல தோன்றும் ஒருவர், சட்டத்தை அமுல்படுத்துவதர்க்கு பதிலாக பிக்குவிடம் பணிகளை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டதை காட்டுகிறது. ஆனால் நேற்று இரவு 8 மணி வரை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தன.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களிடம், காவல்துறையினர் தங்கள் கடமையை செய்யாததை பற்றி நான் நேற்று இரவு தெரிவித்தேன். யாரும் சட்டத்திற்கு மேலானவரல்ல என்று கூறும் ஜேவிபியின் (NPP) வாக்குறுதி, பௌத்த பிக்குகள் தொடர்பாக வரும்போது செயல்படுத்தப்படாததாகத் தோன்றுகிறது என்றும் கூறினேன்.

இதனை தொடர்ந்து சிலை அகற்றப்பட்டுள்ளது, மேலும் சட்டவிரோதமாக நடைபெறும் கட்டுமானமும் அகற்றப்படும் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்ததற்காக அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments: