யாழ்ப்பாணத்தில் இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாகப் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்கவே இருவரும் யாழ்ப்பாணம் வருகின்றனர்.
இதன்போது, யாழ்ப்பாணம், பாஷையூரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி இருவரும் பல்வேறு இடங்களில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்றும் தெரியவருகின்றது
No comments: