வசீம் தாஜுதீன் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலைகள் மற்றும் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போன சம்பவங்களுக்கு காரணமானவர்களை அரசாங்கம் விசாரணை செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
அமைதியான மக்களை கொன்று குவித்த குற்றவாளிகள் அந்த சம்பவங்களுக்கு பதிலளிக்கவில்லை இந்தநிலையில் அனைவரும் அச்சமின்றி வாழும் சூழல் உருவாக்கப்படும் என்று அநுரகுமார தெரிவித்துள்ளார்.தம்புள்ளையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இந்த உறுதியை அளித்துள்ளார்.அரசியல் அதிகாரத்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும்.இந்தநிலையில் அனைவரின் உயிர்களும் பெறுமதியானவை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதோடு அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி நடத்தப்படும் அனைத்து கொலைகளின் சகாப்தம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
No comments: