News Just In

11/26/2024 02:41:00 PM

மின்சார விநியோகத் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் அறிவித்தல்!

மின்சார விநியோகத் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் அறிவித்தல்!




நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மின்சார விநியோகத்தடை ஏற்படுமாயின் அது தொடர்பில் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார விநியோகத்தடை ஏற்படும் நிலையில், அது தொடர்பில் அறிவிப்பதற்கான முறைமையினையும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, CEBCare எனும் செயலி ஊடாக அல்லது இலங்கை மின்சார சபையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் அல்லது 1987 எனும் துரித இலக்கத்திற்குக் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அறிவிக்க முடியுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் சேவையினை பெற்றுக்கொள்ள முடியுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

No comments: