
நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடும், வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு தலைமை அலுவலகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கட்சியின் ஆதரவாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்,
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கட்சியின் தலைவரும் வேட்பாளருமான ரி.அருண்மொழிவர்மன் உட்பட எட்டு வேட்பாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
No comments: