நாடாளுமன்றத் தேர்தலுக்கான சுவரொட்டியை விளம்பரப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்து விநாயகபுரம் பகுதியில் வேட்பாளர்களின் விளம்பர சுவரொட்டிகளை குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு ஒட்டிய போது மின் ஒழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனையடுத்து குறித்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
முத்து விநாயகபுரம் பகுதியை சேர்ந்த காசலிங்கம் தங்கதீபன் என்ற 45 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முத்து விநாயகபுரம் பகுதியை சேர்ந்த காசலிங்கம் தங்கதீபன் என்ற 45 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
No comments: