(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவன் யூ.எல்.அஸ்ஜத் 57.6 செக்கனில் கடந்து புதிய சாதனையை ஏற்படுத்தி முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினையும்,
16 வயது ஆண்கள் பிரிவில் எம்.எம்.றிஹான் 300 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் 42.9 செக்கனில் கடந்து புதிய மாகாண சாதனையுடன் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும் ,16 வயது பிரிவில் 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்ட போட்டியில் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினையும், 20 வயது ஆண்கள் பிரிவில் 4×100 அஞ்சல் ஓட்ட போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டனர்.

No comments: