News Just In

9/13/2024 10:59:00 AM

அதிபர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் கிடைக்காத ஆசிரியர்கள் கல்வியமைச்சரை சந்தித்தனர்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கும் அதிபர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து இதுவரை நியமனம் கிடைக்காத ஆசிரியர்களுக்குமான சந்திப்பு ஒன்று மட்டக்களப்பு கல்லடி தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

இதன்போது 2018 இல் விண்ணப்பம் கோரப்பட்டு 2019 இல் பரீட்சையில் சித்தியடைந்த தாங்கள் நேர்முக தேர்வை முகம் கொடுத்த போதும் தங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் நியமன பட்டியலில் உள்வாங்கப்படவில்லை என்பது குறித்து கல்வியமைச்சரிடம் ஆசிரியர்கள் தெளிவுபடுத்தி தமக்கான நீதி கிடைக்க வழி செய்யுமாறு கூறினார்கள்.

இச்சந்திப்பில் செயற்திட்ட அபிவிருத்தி அமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா, ஆளுனர் நஸீர் அஹமது ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments: