News Just In

9/13/2024 02:56:00 PM

2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!




2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்

. ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (13) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

எமது தேவை மிக விரைவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட வேண்டும் என்பதுதான் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெறுபேறுகளை இறுதி செய்யும் பணி இன்னும் சில நாட்களில் நிறைவடையும் என்றும் இதனையடுத்து இன்னும் இரு வாரங்களுக்குள் செப்டெம்பர் மாதத்திற்குள்ளாகவே பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்க்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: