News Just In

9/10/2024 06:45:00 AM

நண்பர்களின் கிறிக்கட் போரில் தெல்லிப்பளை மகாஜனா பழைய மாணவர் அணி 130 ஓட்டங்களினால் வெற்றி!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
யாழ்ப்பாணம் ,தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பழைய மாணவர் அணிக்கும், யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் அணிகளுக்கிடையே நடைபெற்ற நண்பர்களின் போர் என வர்ணிக்கப்படும் ரீ 20 கிறிக்கட் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனா பழைய மாணவர் அணி 130 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தெல்லிப்பளை மகாஜனா அணி 20 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் அணி 18.5 ஒவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது.

இப்போட்டியில் 130 ஓட்டங்களினால் வெற்றி தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் அணி வெற்றி பெற்றது.

No comments: