News Just In

9/09/2024 05:29:00 PM

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி 12 வயது அஞ்சலோட்ட மாணவர்கள்முதலிடம்!

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி 12 வயது அஞ்சலோட்ட மாணவர்கள் கிழக்கு மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான 4×50 மீற்றர் அஞ்சலோட்டத்தில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளனர்.


(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கிழக்கு மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் 12 வயது ஆண்கள் பிரிவில் 4 X 50 மீற்றர் அஞ்சலோட்ட நிகழ்ச்சியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்து கல்லூரிக்கு பெருமையை தேடித்தந்ததோடு தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளனர்.

இவ் வெற்றிக்காக உறுதுனையாய் இருந்த மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனை, வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ. ஜாபிர் உள்ளிட்ட கல்வி சமூகம் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் மாணவர்களை வழிநடத்திய பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.அப்ராஜ் றிலா, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.யூ.ஏ.சம்லி ஆகியோருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

No comments: