News Just In

8/09/2024 01:59:00 PM

கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி தைகொண்டோ (Taekwondo) அணியினர் கிழக்கு மாகாண மட்ட போட்டிகளில் தொடர்ச்சியான மூன்று தடவைகள் வெற்றி !

கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி தைகொண்டோ (Taekwondo) அணியினர் கிழக்கு மாகாண மட்ட போட்டிகளில் தொடர்ச்சியான மூன்று தடவைகள் வெற்றி கொண்டு புதிய சாதனை

(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தைகொண்டோ சுற்றுப்போட்டியில் (Eastern Province Inter School Taekwondo Championship) கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி 2022ம் ஆண்டு இக் கல்லூரி ஏற்படுத்தியிருந்த சாதனையை (41 புள்ளிகள்) கடந்த 2023ம் ஆண்டு முறியடித்து (42 புள்ளிகள்) மீண்டும் இவ்வருடம் 2024ம் ஆண்டு முறியடித்து ஆண்களுக்கான முழுநிலை சம்பியன்களாக (48 புள்ளிகள்) ஆக தெரிவு செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

இதில் 7 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் அடங்களாக மொத்தம் 19 பதக்கங்களை பெற்றுள்தோடு, .13 வீரர்கள் தேசிய போட்டிக்கும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் அடைவிற்காக உறுதுணையாய் இருந்து மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி போட்டி நடைபெற்ற அரங்கிற்கே வருகை தந்து ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் அவர்களும் இணைப்பாடவிதானத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபர் ஏ.எல்.எம்.தன்ஸீல், பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள், மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி நெறிப்படுத்திய பாடசாலையின் ஆசிரியர் மற்றும் பிரதம பயிற்றுவிப்பாளர் யூ.ஏல்.எம்.இப்றாஹிம், மற்றும் உதவி பயிற்றுவிப்பாளர்கள் ஜே.ஏ.சும்ட், ஏ.ஏ.ஹமீம் ஏ.ஏ.ஹம்தான் , ஏ.பீ.ஏ.சிஹாப் மற்றும் போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் கல்வி சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

No comments: