எனது மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவே ஜனாதிபதியிடம் இருந்து பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக 60 கோடி ரூபாவை பெற்றேன் . நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனை தெரிவித்தேன். எனது தேர்தல் விஞ்ஞாபனம் கூட உரிமை சார்ந்த அபிவிருத்தி என்றே அமைந்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுடன் நேரடியாக பயணிக்கின்றமையினால் அவர்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவே ஜனாதிபதியிடம் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெற்றேன்.
அத்துடன், மக்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ஆளுமை என்னிடம் உள்ளது.அதற்கமையவே 60 கோடி ரூபாய்கான வேலைதிட்டத்தின் பட்டியலை சமர்பித்து 60 கோடி பன்முகப்படுத்தப்பட்ட நிதியை மக்களுகாக பெற்றேன்.
No comments: