News Just In

8/15/2024 10:44:00 AM

கிழக்கு மாகாண ஜீனியஸ் 7 விருதுப் பிரிவின் "எடின்பரோ கோமகன் சர்வதேச விருது "இளைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்



அஸ்ஹர் இப்றாஹிம்)

சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி அண்மையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரித்தானிய ‘எடின்பரோ கோமகன் சர்வதேச விருது வழங்கல் விழாவில் கிழக்கு மாகாணத்தில் ஜீனியஸ்7 விருதுப் பிரிவு(G7 Award Unit) மற்றும் கோல்டன் அசிவர்ஸ் (Golden Achievers Award unit)விருதுப் பிரிவு ஊடாக சும்மார் 63 இளைஞர் யுவதிகள் வெள்ளி மற்றும் வெங்கல விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

இத் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான விருது வழங்கும் விழா மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளரும் ,இலங்கை சிரேஷ்ட நிருவாக அதிகாரியுமான ஏ.எல்.எம் சலீம் ,மையோன் குறூப் கம்பனியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளார் ரிஸ்லி முஸ்தபா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர், மாவட்ட உதவிப் பணிப்பாளர்கள், இளைஞர் சேவை அதிகாரிகள், மாவட்ட மற்றும் தேசிய சம்மேளத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments: