ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அணியினரால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைவர் பதவியை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: