சிறுபோக வேளாண்மை அறுவடை முடிந்த கையேடு அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த வாரத்திற்குள் மட்டும் பல உயிர்கள் காட்டு யானைகளால் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன், குடியிருப்புகள், பயன்தரும் மரங்கள் மற்றும் உடமைகளுக்கும் பலத்த சேதத்தை உண்டு பண்ணியுள்ளன.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி கிராமத்திற்குள் செவ்வாய்க்கிழமை (20) புகுந்த காட்டு யானை தனியாருக்கு சொந்தமான நெல் களஞ்சியசாலையின் சுவரை உடைத்து அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல் மூடைகளையும் சேதப்படுத்தியுள்ளன.
அதே வேளை காட்டு யானை அப்பிரதேசத்தில் பயன்தரும் தென்னை மரங்களுக்கும் பலத்த சேதத்தை உண்டுபண்ணியுள்ளதுடன், பிரதேச மக்கள் இட்ட கூச்சல் சத்தத்தினால் காட்டு யானை வேறு இடத்திற்கு துரத்தப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)
No comments: