(அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் இவ்வருடம் கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு சீருடை (Jersey) பாடசாலையின் நலன்விரும்பி ஒருவரினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
மேற்படி விளையாட்டு சீருடைகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து பாடசாலையின் விளையாட்டு பிரிவினரிடம் கையளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் கடந்த திங்கள் (26) இடம்பெற்றது.
இச் சீருடைகளை பாடசாலையின் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எம்.எப்.எம்.றிபாஸ் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.எம்.ஏ.ஆபாக் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம்.எப்.எம்.றிஸ்வி ஹாதீம் , ஆசிரியர்கள் , கல்வி சாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
2024 கல்முனை வலயமட்ட விளையாட்டுப் போட்டிகளில் பல பிரிவுகளில்1ஆம் ,2ஆம் இடங்களைப் பெற்று கிழக்கு மாகாண மட்ட போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்களுக்கே இச் சீருடைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

No comments: