News Just In

8/23/2024 05:57:00 PM

பல்கலைக்கழக மாணவ தூதுவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கலும் சிறுவர் பாதுகாப்பு குறித்த பயிற்சியும்!




நூருல் ஹுதா உமர்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் பல்கலைக்கழக மாணவ தூதுவர்களுக்கான (University Student Ambassador) நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் சிறுவர் பாதுகாப்பு குறித்த பயிற்சி பட்டறையும் தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட கேட்போர் கூடத்தில் 2024.08.22 ஆம் திகதி இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான நிலையத்தின் தலைவியும் மாணவ தூதுவர்களுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தென்கிழக்கு பல்கலைக்கழக இணைப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.டபிள்யூ .என். நளீபாவின் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல் அப்துல் மஜீத் கலந்து கொண்டார்.

நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சார்பில் பணிப்பாளர் சானிக மலல்கொட, அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் திருமதி லக்ஷிகா மாணிக்போவ, ஊடக சி.டி மற்றும் தகவல் உத்தியோகத்தர். தனுஷ்க சேனாரத்ன, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் போன்றோர் பங்கு கொண்டனர்.

நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல், சமூகவியல் துறை தலைவர் பேராசிரியர் எஸ்.எம். ஐயூப், புவியியல் துறை தலைவர் கே. நிஜாமிர் உள்ளிட்ட விரிவுரையாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அஷ்ஹர், மாணவ தூதுவர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

No comments: