News Just In

8/23/2024 05:54:00 PM

திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு பிராந்திய பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் திடீர் விஜயம்!


(அஸ்ஹர் இப்றாஹிம்)

திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன் அவ் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.மசூத் மற்றும் ஏனைய வைத்தியர்களுடனும் கலந்துரையாடிய பணிப்பாளர் திருக்கோவில் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்கள், பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள், அவர்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பாகவும் வைத்தியர்களின் கவனத்திற்கு எத்திவைத்ததுடன், நோயாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வைத்தியசாலைக்கும் பொதுமக்களுக்குமிடையில் நல்லதொரு உறவினை ஏற்படுத்துமாறும் வைத்தியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றுகின்ற வைத்திய நிபுணர்களின் ஒத்துழைப்புடனும் விசேட வைத்திய நிபுணர்களின் ஊடாகவும் திருக்கோவில் வைத்தியசாலையின் சேவையினை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பணிப்பாளர் இதன்போது குறிப்பிட்டார்.

இதன்போது பிராந்திய கண்கானிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் அவர்களும் கலந்துகொண்டார்.

No comments: