News Just In

8/23/2024 06:01:00 PM

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள குருநாகல்,பரஹதெனிய தேசிய கல்லூரி மாணவன் ஹுமைத் பாடசாலை கல்வி சமூகத்தால் பாராட்டி கெளரவிப்பு!


(அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை பாடசாலை காற்பந்தாட்ட சம்மேளத்தினால் 17 வயதின் கீழ் காற்பந்தாட்ட தேசிய அணியில் இடம் பிடித்து இந்தியாவில் நடைபெறும் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்ற இருக்கும் குருநாகல்,பரஹதெனிய தேசிய கல்லூரி மாணவன் ஏ.எச். ஹுமைத் அவர்களுக்காக பாடசாலை சமூகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு (21)பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவனின் பெற்றோர் பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் , பாடசாலை பழைய மாணவர் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள், இலவன் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள் , சொக்கர் விளையாட்டு கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள் , நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் தேசியமட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவனுக்காக பணத்தொகை அன்பளிப்பு மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

No comments: