News Just In

8/26/2024 03:54:00 PM

வினோ நோதராதலிங்கம் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை: ரெலோ திட்டவட்டம்!




தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார் (புரூஸ்) தெரிவித்துள்ளார்.

வவுனியா, விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் நேற்று (25.08.2024) மாலை இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுளார்.

அக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கட்சிகளில் தமிழீழ விடுதலை இயக்கமும் ஒன்றாகும்.

ஆனால் அக்கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த பின்னர் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளதுடன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பொது வேட்பாளரை விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் ரெலோவின் உண்மையான நிலைப்பாடு என்ன என கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதில் அளித்த மாவட்ட பொறுப்பாளர் வியகுமார் (புரூஸ்), வினோ எம்.பி தற்போது கட்சியின் எந்தவொரு கட்டமைப்பிலும் இல்லை.

அவர் எந்த பதவிகளிலும் இல்லை. அவர் ஒரு சாதாரண உறுப்பினர். அவர் தற்போது பலவிதமாக கதைக்கிறார்.

நாம் கட்சியாக தலைமையின் அனுமதியுடன் இந்த பொது வேட்பாளர் தொடர்பான கட்டமைப்பில் தொடர்ந்தும் பயணிப்போம் எனக் கூறுகின்றேன்.

இந்த தேர்தல் முடியும் முன் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். நாம் பொது வேட்பாளருக்கே ஆதரவு.” என்றார்

No comments: