(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய அதிபராக அதிபர் தரத்தை சேர்ந்த ரீ.கே.எம்.சிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலையின் பிரதி அதிபராக கடமையாற்றி வந்ந நிலையில் அப் பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய எம்.ஐ.எம்.சைபுதீன் ஓய்வு நிலையை அடைந்ததனை தொடர்ந்து இவர் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவரான இவர் சிறு வயதிலிருந்தே குறுந்தூர ஓட்டத்தில் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் சம்பியனாக தொடர்ச்சியாக திகழ்ந்த இவர் அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரியில் பயின்று உடற்கல்வித்துறை ஆசிரியராக நியமனம் பெற்று பின்னர் அதிபர் போட்டிப் பரீட்சையில் திறமையாக சித்தியடைந்தவராவார்.
இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த மர்ஹும் தர்ம கபீர் தம்பதிகளின் புதல்வராவார்
No comments: