(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு மாகாண மட்ட தனி நடனப் போட்டியில் இரு பெண் போட்டியாளர்களை பின்தள்ளி முதலிடத்தை பெற்று அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய கல்லூரி மாணவன் மு.மினுஜன் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
அண்மையில் கல்முனை உவேஸ்லி உயர்தர பாடசாலையில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ்மொழி தின கிழக்கு மாகாண மட்டப் போட்டியிலேயே இம்மாணவன் தனிநடனம் பிரிவு 5 இல் போட்டியிட்டு முதலிடத்தை பெற்றுக்கொண்டு பாடசாலைக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் அக்கரைப்பற்று மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இம்மாணவன் அக்கரைப்பற்று நாவற்காட்டை சேர்ந்த திரு திருமதி முகேஸ் அவர்களின் சிரேஸ்ட புதல்வன் என்பதோடு சிறுவயது முதலே நடனத்துறையில் மிகவும் ஆவர்வம் காட்டி வந்தவர்.
அத்தோடு பல போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல விருதுகளை சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டவர் என்பதும் இவருக்கான பயிற்சியை
பாடசாலை மட்டத்தில் நடன ஆசிரியை அனுஷியா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவருக்கான சான்றிதழை கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள உதவிக்கல்விப்பணிப்பாளர் சு.சிறிதரன் வழங்கி வைத்தார்.

No comments: