(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களின் அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் மருத்துவ உபகரணங்கள், தளபாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மருதமுனை பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ
தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்லார்தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் திருமதி ஸகீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தளபாடங்களைக் கையளித்தார்.
இதன்போது பிராந்திய கண்கானிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் எனப்பலர் கலந்துகொண்டனர்.
No comments: