ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னாயத்தப் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் தினமாக உள்ள நிலையில், இதுவரையில், 12 ஆயிரம் பேர்தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.
மாவட்டத்தில் 04 இலட்சத்து 49 ஆயிரத்து 686 பேர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் மாவட்ட உதவிதேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: