News Just In

7/25/2024 12:58:00 PM

புறக்கோட்டை பழக்கடையின் மேல் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

கொழும்பு, புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள பழக்கடை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த 19 வயதுடைய இளைஞன், காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த புதன் கிழமை (24) அவசர முடிவொன்றை எடுத்து தற்கொலை புரிந்துள்ளார்.

நிந்தவூரைச் சேர்ந்த இந்த இளைஞன், வேலை செய்து கொண்டிருந்த போது, தொழுகையில் ஈடுபடுவதாகக் கூறி, குறித்த கடை அமைந்துள்ள கட்டடத்தின் மூன்றாவது மாடிக்கு சென்று தனது காதலிக்கு வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டு அவர் தற்கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த இளைஞனின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: