News Just In

7/31/2024 03:56:00 PM

ஹமாஸ் தலைவரின் கொலைக்கு பழிவாங்குவது ஈரானின் கடமை- ஈரான் தலைவர்கள் சூளுரை



ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டமைக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் தெரிவித்துள்ளார்.

இந்த கோழைத்தனமான கொலை குறித்து இஸ்ரேல் கவலைப்படும் நிலையை ஏற்படுத்துவேன் என தெரிவித்துள்ள அவர் ஈரான் தனது ஆட்புல ஒருமைப்பாடு,கௌரவம் ஆகியவற்றை பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தலைவரை துணிச்சலானவர் என ஈரான் ஜனாதிபதி வர்ணித்துள்ளார்.

ஹமாஸ் தலைவரின் கொலைக்கு பழிவாங்குவது ஈரானின் கடமை என ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.குறித்த சம்பவம் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹனியா, ஈரானிய ஜனாதிபதி மசூத் பிசாக்கியானின் பதவி ஏற்பு நிகழ்வில் பங்குபற்றியதன் பின்னர், இருப்பிடம் திரும்பிய நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

No comments: