News Just In

7/04/2024 01:46:00 PM

யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பந்தனின் உடலம் !





யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள இரா.சம்பந்தனின் உடல் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு சம்பந்தனின் உடல் கொண்டு செல்லப்பட்ட து 

இதன்படி, இன்று காலை முதல் மணியிலிருந்து மாலை 4.00 மணிவரையில் சம்பந்தனின் உடல் யாழ்ப்பாணத்தில் வைக்கப்படும் என அவரது குடும்ப உறுப்பினர்கள் முன்னர் அறிவித்திருந்தனர்.

யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை முதல் மாலை 4 மணி வரை அன்னாரின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் அன்னாரின் புகழுடல் விமானம் மூலம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.

சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: