(அஸ்ஹர் இப்றாஹிம்)
யாழ்ப்பாணம்- மானிப்பாய் கட்டுடை சந்தியில் வேனோன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்டதில் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சங்கானையைச் சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான முகுந்தன் அஜந்தா என்பவரே உயிரிழந்தவராவார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இன்னுமொரு பெண் படுகாயமுற்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் இருவர் தப்பி ஓடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய வான் சாரதி தப்பி ஓடிய நிலையில் வேரொருவர் கைது செய்யப்பட்டதால் அந்த இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: