(அஸ்ஹர் இப்றாஹிம்)
முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் தேசிய அபிவிருத்தி வாரத்தையொட்டி காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. ஜெஸ்மிர் அவர்களின் நெறிப்படுத்தலில் காரைதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கு "பிள்ளைகளின் உணவு பழக்கமும் நாளாந்த செயற்பாடும்" எனும் தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த புதன்கிழமை (2024.07.24) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன் கலந்து கொண்டதோடு, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார மருத்துவ தாதியர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
No comments: