News Just In

7/17/2024 06:34:00 AM

திருகோணமலை நிலாவெளி பகுதியில் உள்ள அரச அலுவலகத்தில் வைத்து பெண் ஒருவர் அதிகாரிகளால் தாக்குதல் !



திருகோணமலை  நிலாவெளி பகுதியில் உள்ள அரச அலுவலகத்தில் வைத்து பெண் ஒருவர் அதிகாரிகளால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் விடுதி ஒன்றின் உரிமையாளர் எனவும் விடுதியில் நீர் துண்டிக்கப்பட்டிருந்ததால் நிலாவெளியில் அமைந்துள்ள நீர் வடிகாலமைப்பு அலுவலகத்திற்கு இது தொடர்பில் தெரியப்படுத்த சென்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இதன்போது, அங்கிருந்த அதிகாரிகள் உரிய முறையில் பதிலளிக்க மறுத்ததோடு மோசமான வாரத்தை பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பெண் மீது அவர்கள் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்

No comments: