
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நேற்றைய தினம், மட்டக்களப்பு வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்து வரப்பட்ட நிலையில், இன்று காலை விசேட அபிடேகம் மற்றும்யாக பூசைகள் இடம்பெற்றன. தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, சுவாமி கொடிக் கம்பத்திற்கு அருகே எழுந்தருள, வேத, நாத முழக்கத்துடன், அடியார்களின் அரோகரா கோசத்துடனும் கொடியேற்ற நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
எதிர்வரும் 3ம் திகதி தேர்த் திருவிழாவும், ஆடியமாவசையன்று தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.
No comments: