News Just In

7/03/2024 05:23:00 PM

ஓய்வை அறிவித்த காற்பந்து ஜாம்பவான் ரொனால்டோ!




நடப்பு (EURO) யூரோ கிண்ணத்தொடர் தான் தனது கடைசி ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தெரிவித்துள்மை காற்பந்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்லோவேனியா அணியுடன் கடந்த திங்களன்று நடைபெற்ற போட்டிக்குப் பிறகே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “இதுவே எனது கடைசி ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடராகும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை, கால்பந்து விளையாட்டின் மீது எனக்கு இருக்கும் ஆர்வமும் உற்சாகமும் அப்படியே தான் இருக்கிறது.

எனது ரசிகர்களும், குடும்பத்தினரும் என் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் பாசத்தையும் கண்டு நான் உற்சாகம் அடைகிறேன்.

மேலும், எனது இந்த செயல்பாட்டின் பிரதான நோக்கமே அனைவரையும் மகிழ்விப்பது தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: