News Just In

7/28/2024 08:17:00 PM

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான எறிபந்து போட்டியில் நகரப்புற பாடசாலைகளை பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகள் பிகாசிப்பு!

வட மாகாண பாடசாலைகள் பங்கேற்ற எறி பந்து (Throwball) போட்டியில் பல நகரப்புற பாடசாலைகளை பின் தள்ளி கிராமப்புற பாடசாலைகள் பிரகாசிப்பு



(அஸ்ஹர் இப்றாஹிம்)
17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் முல்லைத்தீவு கோட்டை கட்டிய குளம் மகா வித்தியாலயம் சம்பியனாகவும்,மன்னார் அடம்பன் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் வவுனியா காங்கராயன்குளம் மகா வித்தியாலயம் சம்பியன்களாகவும், மன்னார் அடம்பன் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் வவுனியா காங்கராயன்குளம் மகா வித்தியாலயம் சம்பியன்களாகவும், யாழ்ப்பாணம் ராமநாதன் கல்லூரி இரண்டாம் இடத்தையும், 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் மன்னார் அடம்பன் மகா வித்தியாலயம் சம்பியன்களாகவும், வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments: