News Just In

7/29/2024 07:57:00 PM

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலய மாணவி மாவட்ட மட்ட போட்டிக்குத் தெரிவு.!



(எஸ்.அஷ்ரப்கான்)

இம்முறை (2024) நடைபெற்ற வலய மட்டத்திலான தமிழ்மொழித்தினப் போட்டியில் சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலய மாணவி கே.எப். நிஸ்கா முதலாம் பிரிவுக்குரிய வாசிப்புப் போட்டியில் கலந்து கொண்டு முதலாமிடத்தை பெற்று மாவட்ட மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

முதன்முதலாக இம்மாணவி இச்சாதனையை நிலை நாட்டியமைக்காக பாடசாலையின் அதிபர் பிரதி அதிபர்,உதவி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இம்மாணவியைப் பாராட்டியுள்ளனர்.

அண்மைக்காலமாக இப்பாடசாலையின் அதிபர் ஜனாப்.எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் பல்வேறு வெற்றிகளை கல்வி மற்றும் இணைப்பாடவிதானம் ரீதியாக இப்பாடசாலை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: