எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இன்று (29) இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சி ஆதரவு வழங்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சி எடுத்துள்ள இந்த தீர்மானத்தை மீறும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments: