News Just In

7/28/2024 03:43:00 PM

சம்மாந்துறை பட்டதாரிகள் அமைப்பினால் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பெளதீகவியல் பாட செய்முறை செயலமர்வு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
இம்முறை கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கும் மற்றும் 2025, 2026 இல் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்குமான பௌதீகவியல் செயன்முறை பயிற்சி முகாமொன்று பொறியியல் மற்றும் மருத்துவ துறைக்கான பட்டதாரிகள் அமைப்பினால் பாடசாலைகளின் அதிபர்களின் பூரண ஒத்துழைப்புடன் மிகச்சிறந்த முறையில்(25) நடத்தப்பட்டது

செய்முறை செயற்றிட்டத்தை பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி அமைப்பின் ( UGEMS) அங்கத்தவர்களினால் செயற்படுத்தப்பட்டது.

இச் செயன்முறை செயல் திட்டத்தில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மற்றும் அல் மர்ஜான் பெண்கள் உயர் பாடசாலை மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

No comments: