News Just In

7/18/2024 06:37:00 PM

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் இளம் கண்டு பிடிப்பாளர்களுக்கான களம் அமைக்கும் நிகழ்வு-!



(எம்.எம்.றம்ஸீன்)
"எம் எதிர்கால மாணவர் சமுதாயத்தின் விஞ்ஞான ஆர்வத்தை மேம்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திட்டு அவர்களையும் வேலை உலகிற்கு தயார் படுத்துதல்" எனும் தொனிப் பொருளில் கல்வியமைச்சினால் பாடசாலைகளுக்கு இடையிலான இளம் கண்டு பிடிப்பாளர்களுக்கான போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் இவ்வாறான போட்டி நிகழ்வுகளுக்காக மாணவர்களின் சிறந்த கண்டு பிடிப்புகளை இனங்கண்டு கொள்ளவென அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலையில்) பாடசாலை மட்ட இளம் கண்டு பிடிப்பார்களுக்கான கண்காட்சி நிகழ்வு இடம் பெற்றது.


கல்லூரி அதிபர் ஏ.எச்.பௌஸ் தலைமையில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எம்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறி ஊக்கப்படுத்தினார்.


கல்லூரியின் இணைப்பாட விதானச் செயற்பாடுகளுடன் தொடர்பு பட்டு இயங்கிவரும் "இளம் புத்தாக்குனர் கழகம்" இக்கண்காட்சியை ஒழுங்கமைத்து நடாத்தியது.



இந்த நிகழ்வில் கல்லூரியில் தரம் 6-13 வரை கல்வி பயிலும் பல மாணவர்கள் தங்களது புதிய கண்டுபிடிப் புக்களை சமர்ப்பித்து அவற்றுக்கான விளக்கங்களையும் கோரினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: