
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்கராஸ். ஜோகோவிச் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
21 வயதான அல்கராஸ் இதன் மூலம் தனது பட்டத்தை தக்கவைத்துள்ளார். கடந்த ஆண்டும் அவர் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்று இருந்தார். இது அவர் வென்றுள்ள நான்காவது கிராண்ட்ஸ்லாம் தொடராகும். இந்தப் ஆட்டத்தில் பெரும்பாலான நேரம் ஆதிக்கம் செலுத்தி இருந்தார் அல்கராஸ். இருந்தும் ஜோகோவிச் சமயங்களில் தனது கம்பேக்கை கொடுத்து இருந்தார். அது பார்வையாளர்கள் கவர்ந்தது.
6-2, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் பட்டம் வென்றுள்ளார் அல்கராஸ். பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் போன்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் அவர் பட்டம் வென்றுள்ளார். இன்னும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் தான் அவர் பட்டம் வெல்லாமல் உள்ளார்.
பிரிட்டனின் ஹென்றி பாட்டன் மற்றும் பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா ஆகியோர் ஆடவர் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இதே போல அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் மற்றும் செக் குடியரசின் கேடரினா சினியாகோவா ஆகியோர் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
No comments: