News Just In

6/24/2024 11:40:00 AM

மட்டக்களப்பில் ஜனாதிபதி அவர்களை மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் உடன் சந்தித்து உரையாடினார் இரா .சாணக்கியன்

இரா .சாணக்கியன்  அவர்களின்  கருத்து !



நேற்றைய தினம் மட்டக்களப்பில் ஜனாதிபதி அவர்களை மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் உடன் சந்தித்து அவர்களின் நீண்ட நாள் பிரச்சனையை தொடர்பான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம். எமது நாட்டில் ஜனாதிபதி என்னும் வகையில் அவரினால் தீர்த்து வைக்கக்கூடிய எமது மாவட்ட பண்ணையாளர்களின் பிரச்சனையை பலமுறை அவரிடம் வலியுறுத்தியுள்ளோம் அதற்கான தார்மீக பொறுப்பும் கடமையும் அவருக்கு உள்ளது.

மாலை வரவேற்பை எதிர்பார்ப்பவர்கள் அல்ல நாம் என்றும் எம் மக்களின் பிரச்சனையை தீர்க்க முனைபவர்கள். மக்களுக்காகவே எமது பயணம் என்றும் தொடரும். எமது மக்கள் என்றும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் போது அவர்களுக்கான நிரந்தர தீர்வே எமது இலக்கு.


நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியினால் செய்யக்கூடிய விடயங்கள் இன்றும் மேற்கொள்ளப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதையடுத்து அன்று மாலை 3.00 மணிக்கு முதல் சந்திப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை ஜனாதிபதி முதலில் செய்ய வேண்டும். ஏனைய வேட்பாளர்களால் வாக்குறுதிகளை மட்டுமே வழங்க முடியும்; ஆனால் ஜனாதிபதியினால் மாத்திரமே தான் கூறியதை செய்ய முடியும். மக்கள் பிரதிநிதிகளாக மக்களின் பிரச்சனைகளை நாம் ஜனாதிபதியிடம் கூறினாலும் துறை சார் பிரதிநிதிகளாக காணப்படும் சங்கங்களும் ஜனாதிபதியிடம் தம் பிரச்சனைகளை முன்வைத்தால் மாத்திரமே ஜனாதிபதி எமது பிரச்சனைகளை உணர்வார்.


ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தவர்கள் அவர்கள் தப்பிப்பதற்காக, மட்டக்களப்பு மாவட்ட மக்களின் எதிர்காலத்தை அடகு வைத்து அவர்களின் சுயநலனுக்காக மாறி மாறி அறிக்கைகளை வெளியிடுவர்; ஆனால் நாங்கள் எப்போதும் மக்களின் நலனுக்காகவே இருப்போம். நல்லாட்சி காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் பயணித்த நாங்கள் தற்போது ராஜபக்ஷ குடும்பத்திற்கு தோழமையாக செயற்படுகின்றார் என்பதனால் அவருக்கு நாங்கள் ஆதரவு வழங்கவில்லை. ராஜபக்ஷ குடும்பத்தினர் எமது மக்களுக்கு எதிராக செய்த அநீதிகள், கொலைகளை நாங்கள் மறவாமல் இருப்பதனால் அவர்களோடு சேர்ந்து பயணிக்க முடியாது. அன்றும் இன்றும் நாங்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றோம். ஆனால் மாறி மாறி வாக்குறுதிகளை வழங்குவோர் சஜித் பிரேமதாச அவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கும் ஆதரவு வழங்குவதாக தம் சுய நலனின் நிமித்தம் கூற முடியும். தாங்கள் தப்பித்துக் கொள்ள எதையும் செய்பவர்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

No comments: