News Just In

6/10/2024 05:40:00 AM

தமிழக முதலமைச்சரை சந்தித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!



இலங்கையின் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்தமிழக முதலமைச்சர் மு.கா. ஸ்டாலினை(M. K. Stalin) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்று (09.06.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு ஆற்றி வரும் வீட்டுத்திட்டம் மற்றும் ஏனைய நலனோம்புகை திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதுடன் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் போது மேற்கொண்ட நலத்திட்டங்களுக்கு வர்த்தக இராஜாங்க அமைச்சர் நன்றியை தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர் இலங்கை மக்களின் தேவை மற்றும் இந்திய முதலீடுகளின் அவசியம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

No comments: