விளையாட்டு உலகில் பரம வைரிகள் என வருணிக்கப்படும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நியூயோர்க், நசவ் கன்ட்றி சர்வதேச விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற மிகவும் பரபரப்பான ஏ குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா 6 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 4 புள்ளிகளைப் பெற்று ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் முதல் இடத்தில் உள்ள இந்தியா சுப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவிடம் சுப்பர் ஓவரில் தோல்வி அடைந்த பாகிஸ்தானுக்கு இந்தத் தோல்வியினால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 120 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது

No comments: