News Just In

6/12/2024 05:23:00 PM

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் குருளைச் சாரணர்களுக்கு சின்னம் சூட்டும் முதலாவது நிகழ்வு!


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள நாவற்காடு நாமகள் கனிஸ்ட வித்தியாலயத்தில் குருளைச் சாரணர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வுஇன்று இடம் பெற்றது.

வித்தியாலய அதிபர் சிவாஜினி ஜெயராஜ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், வலயக் கல்விப் பணிப்பாளர் வை.யோகேந்திரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சஜீவன், மாவட்ட சாரணர் ஆணையாளர் வி.பிரதீபன், குருளைச் சாரணர் மாவட்ட தலைவர் என்.பிரதீபன், உதவி ஆணையாளர் ஜெயக்காந்தன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் முதலாவது குருளைச் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு இது வாரும். 62 குருளைச் சாரணர்கள், சாரணர் கழுத்துப் பட்டி அணிவித்து சின்னகளை பெற்றுக் கொண்டனர்.

No comments: