News Just In

5/15/2024 06:24:00 PM

இந்தியாவுடன் இணைந்து சிறிய ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க இலங்கை முயற்சி - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்



சிறியஆயுதங்களை உற்பத்திசெய்யும் ஆயுத தொழிற்சாலையை அமைப்பது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இராணுவம் இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சிகுறித்து இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை இராணுவத்திற்கு நிபுணத்துவம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை உற்பத்தி தொழில்துறை குறித்து கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஏற்கனவே ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றோம் ஆனால் சிறிய அளவில் என தெரிவித்துள்ள அவர் நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தருணத்தில் நாங்கள் இந்தியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இந்திய இலங்கை பாதுகாப்பு உறவுகள் சிறந்த நிலையில் உள்ளன கடந்த இரண்டு தசாப்தகாலத்தில் இந்தியாவின் ஆயுத உற்பத்தி துறை பல மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: