News Just In

5/05/2024 10:03:00 AM

மருதமுனை விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு ஹரீஸ் எம்.பி கணிசமான நிதி ஒதுக்கியுள்ளார் : மாநகர சபை முன்னாள் உறுப்பினர் அமீர் புகழாரம் !



நூருல் ஹுதா உமர்
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் கடந்தகால முன்மொழிவுகளின் பிரகாரம் மருதமுனை கிராமத்தின் பொது விளையாட்டு மைதானமான மசூர் மௌலானா விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு மாத்திரம் 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து தந்தார். என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.ஆர். அமீர் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும், இந்த 05 மில்லியன் நிதியில் உள்ளக திருத்தங்களுக்காக 5 இலட்சம் செலவீடு செய்யப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தை கல்முனை மாநகர சபை முன்னெடுத்திருந்ததுடன் இரண்டாம் கட்டமாக மைதான புனரமைப்புக்கு 30 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இவ்வேலைத்திட்டத்தை அம்பாரை மாவட்ட லீக் செய்திருந்ததுடன் மூன்றாம் கட்டமாக 15 இலட்சம் நிதி ஒதுக்கீட்டை அவர் செய்து தந்தார். 

இந்த நிதியை கொண்டு மைதான வடக்கு தெற்கு பாதுகாப்பு நெற்வேலி அமைத்த வேலையினை அம்பாறை மாவட்ட உதைபந்து லீக் செய்தது.
இதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் பின்னர் இவ்வருடம் (2024) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களிளின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 5 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மட்டுமின்றி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் 20 இலட்சம் நிதியினை மின்னொளி அமைக்கும் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்தார். இருந்த போதும் இத்திட்டத்தினை பூரணமாக முடிப்பதற்கு சுமார் 03 மில்லியன் தேவைப்படும் என்ற கருத்தை கல்முனை மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர பொறியியலாளர் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களிடம் முன் வைத்ததன் பிரகாரம் மேலும் 5 இலட்சம் ஒதுக்கப்பட்டு 01 மில்லியனாக அந்த நிதியொதுக்கீடு மாற்றப்பட்டுள்ளது.

இவைகள் இவ்வாறிருக்க அல்-மனார் மத்திய கல்லூரி மைதான அபிவிருத்திக்கும், ஸம்ஸ் மத்திய கல்லூரி மைதான அபிவிருத்திக்கும் புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலய மைதான அபிவிருத்திக்கும் கணிசமான நிதி ஒதுக்கீடுகளை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் செய்தார் என்பது எவராலும் மறைக்க, மறுக்க முடியாத உண்மையாகும் என்று தெரிவித்துள்ளார்.

No comments: