News Just In

4/16/2024 04:45:00 PM

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில் பயிரிட நடவடிக்கை!



உலகில் மிகவும் சுவையான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 என்ற அன்னாசிப்பழத்தை இலங்கையில் பயிரிடுவதற்கு விவசாயத்திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அன்னாசிப்பழங்களுக்கு உலக சந்தையில் அதிக கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இனிப்புச் சுவை மற்றும் குறைந்த அமிலத்தன்மை கொண்ட MD 2 வகை அன்னாசிப்பழத்தை பயிரிட நடத்தப்பட்ட ஆய்வு வெற்றி அளித்துள்ளது.

எனவே, MD 2 வகை அன்னாசிப்பழத்தை பயிரிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு விவசாயத் திணைக்களத்திற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments: