
எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நவீன முறையில் விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல், அம்மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்றது.
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் மாவட்ட வர்த்தக கைத்தொழில் மற்றும் விவசாய சம்மேளனத்தால் பல முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
நாற்று நடுகையில் நிலவும் சவால், நவீன தொழில்நுட்ப இயந்திரங்களின் பங்களிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது
No comments: