News Just In

4/02/2024 07:46:00 PM

இருமாடி கட்டிட தொகுதி பூர்த்தி இல்லாத நிலையில் கொக்கட்டி சோலையில் பாடசாலை மாணவர்களுக்கு இடையூறு!




(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

உலகப் புகழ்பெற்ற கொக்கடிச்சோலை தான்தோன்றீஸ் வரர் பேராலயத்தின்அருகிலும் மிகவும் பின்தங்கிய பகுதி யிலும் அமைந்துள்ளகொக்கட்டிச்சோலை ராமகிருஷ்ணன் வித்தியா லயத்தில்

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் கிட்டிய பாடசாலை சிறந்த பாடசாலை என்ற விசேட திட் டத் தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டஇருமாடிக் கட்டிடம் சுமார் 5 வருட காலமாக பூர்த்தி செய்யப்படவில்லை என இப்பிரதேச மக்கள்கவலை தெரிவிக்கின்றனர்.

இப் பாடசாலை மாணவர்கள் பெரும் இடநெருக்கடியை நோக்கி இருக்கின்ற இன்றைய நிலையில் பூர்த்தி செய்யப்படாத இந்த இரு மாடி கட்டி டத்தை விரைவாக பூர்த்தி செய்து தர இப்பிரதேச அரசி யல்வாதிகளும் அதிகாரம் படைத்தவர்களும் பூர்த்தி செய்து தர முன் வர வேண்டு முன்வர வேண்டுமென இப்பிரதேச மக்கள் கோரிக் கை விடுக்கின்றனர்.

கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிக்கப் பட்ட இந்த கட்டிட தொகுதி பூர்த்தி செய்யப்படாமல் மழைநீர் தேங்கி நின்று நுளம்பு பெருகி வருவதாகவும் இதேபோல பாட சாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் நவடிக்கை களி னைசெயற்படுத் துவ தற்கு போதிய இ ட வசதி இல்லை என்றும் இப்பகுதி பெற்றோர்கள் குறைபாடு தெரிவிக்கின்றனர் .

கல்வி பொது தராதர சாதாரண பரிட்சையில் திறமை படைத்த இப் பிரதேச மாணவர்களுக்கு மேலும் இந்த கட்டிடத்தை பூர்த்தி செய்து வளங்களை பெற்று தருவதற்கு அரசியல்வாதிகளும் அதிகாரம் படைத்தவர்களும் முன் வர வேண்டு முன்வர வேண்டுமெனவும் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தவிர மிகவும் பழமை வாய்ந்த இப்பாடசாலையில் உள்ள ஆசிரியர் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் ஏனைய புறக்கிருத்திய நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு தேவையான வசதிகளையும் பௌதிக வளங்களையும் பெற்று தருவதற்கு இந்த அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் முன்வர வேண்டும் எனவும்வேண்டு கோள்விடுக்கின்றனர்.


இதே வேளை இக்குறைபாட்டினை நிவர்த்திக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு ம் இப்பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சிக்குள்ள தடையினைபோக்க கூடிய கவனம் செலுத்துமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவின் வலய அமைப்பாளர் பீ.அப்துல் லத்தீப் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானையும் அவசர கடிதம்மூலம்கேட்டுள்ளார் .

No comments: