News Just In

4/18/2024 08:50:00 PM

மட்டக்களப்பு பிரதேச செயலக மட்டங்களில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான உடனடி சிறப்புக் கூட்டம்! இரா .சாணக்கியன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகம் ரீதியாக இதுவரை காலமும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் சம்பந்தமாக அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி J முரளீதரன் அவர்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் இன்றைய தினம் 18.04.2024 சிறப்பு கூட்டம் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபரினால் மட்டக்களப்பு கச்சேரியில் கூட்டப்பட்டிருந்தது அதன் பிரகாரம் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தின் போது என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அராயப்பட்டு அதற்கான தீர்வு திட்டங்களும் முன்மொழியப்பட்டது. கீழே குறிப்பிட்ட பல தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்மொழிந்தேன் எனினும் இன்னும் பல பிரச்சனைகள் மற்றும் ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் என்பன முன்மொழியப் படாமல் உள்ளது எதிர்வரும் காலங்களில் அவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

என்னால் முன்மொழியப்பட்ட பிரதேச செயலக மட்டங்களில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் - 2024

1. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவில் குறுமண்வெளி, குருக்கள்மடம், போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் மண்டூர், மண்முணை தென்மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அம்பிளாந்துறை போன்ற பாதைகளின் இறங்கு துறையின் பணிகள் அனைத்தும் இவ்வருடத்தில் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் பாரிய பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்குகின்றனர்.

2. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிகமாகவே அல்லது நிரந்தரமாகவோ சட்ட வைத்திய அதிகாரியினை நியமிக்க உடனடி நடவடிக்கை மேற்n;காள்ள வேண்டும்.

3. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அரச ஒசுசல கட்டட வசதிகள் உள்ளது. எனவே வைத்தியசாலைக்கு இதை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. மண்முணை தென்எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் எண்டோஸ்கோபி (நுனெழளஉழில) வசதியானது இதுவரை காலமும் இல்லை. அவ்வசதியினை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

5. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் வெங்காயம், மிளகாய் பயிர்ச் செய்கை மழை காலங்களில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

6. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடத்தில் விளையாட்டு மைதானத்தின் ஒருபகுதியை இராணுவத்தினர் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இதனை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

7. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கடற்கரையின் சுற்றுலாத்தளம் அமைத்தல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

8. பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினருக்கு பிரேதபெட்டிகள் தயாரிப்பதற்கான ஒதுக்கீடுகள் வரும் எனக் கூறியும் இதுவரையும் வழங்கப்படவில்லை. இவ் ஒதுக்கீடுகள் வருமா?

9. மண்முணை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு இதுவரை காலமும் அமரர் ஊர்தி இல்லை. மிக விரைவில் அமரர் ஊர்திக்கான வாகனம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

10. மண்முணை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி உட்பட ஏனைய பகுதிகளில் பல வீடுகளில் திருட்டுச் சம்பவம் இடம்பெறுகின்றது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

11. மண்முணை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி 8ம் வட்டாரத்தில் அமைந்துள்ள முன்பள்ளி பாடசாலை தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

12. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற:குட்பட்ட பெரியகல்லாறு கிராமததிற்கும் அம்பாறை மாவட்ட பெயரிநீலாவணை கிராமத்திற்கும் எல்லைப் பிரச்சினை இதுவரை காலமும் தீர்க்கப்படாமல் உள்ளது. இதனை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

13. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள களுவாஞ்சிகுடி பொது மைதானத்தில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவை கடற்கரைக்கு இடமாற்றம் செய்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

14. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள துறைநீலாவணை கிராமத்திற்குச் செல்லும் வீதிக்கு அருகாமையில் சட்டவிரோதமாக கட்டடம் அமையப் பெற்றுள்ளது. அதனை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

15. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மண்டூர் ஒல்லிமடுவலில் மிக நீண்ட நாட்களாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர்தாங்கி முடிவுறாமல் உள்ளது. இதனை உடனடியாக முடிவுறுத்தி மக்களின் பாவனைக்கு வழங்கல்.

16. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் 1978 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியின் போது சேதமடைந்த பசளை களஞ்சிய சாலை மற்றும் நெற்களஞ்சிய சாலை என்பன இதுவரை காலமும் மீள் நீர்மாணம் செய்யவில்லை. இவற்றை மீள் நீர்மாணம் செய்வதற்கான துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

17. போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு திணைக்களத்தினால் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமாதுவை விட தற்போது சனத்தொகைக்கு ஏற்ப அதிகமான தேவைப்பாடாக உள்ளது. எனவே உடனடியாக தேவையாக உள்ள ஆளணியினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை வேண்டும்.

18. போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் யுளுஆP Pசழதநஉவ ஊடாக மக்கள் மத்தியில் சில அதிருப்தி காணப்படுகின்றது. இப்பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

19. போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுகின்றது. இது முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.

20. போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச சபையில் இருக்கும் அமரர் ஊர்தியிலே பிரேதத்தினை கொண்டு செல்வதற்கு ஐயாயிரம் ரூபாயாக அறவிடப்பட்டது. தற்போது பதினையாயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை உடனடியாக ஆராயப்பட வேண்டும்.

21. போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் நீர்ப்பாசனம் தொடர்பாக உலக வங்கியின் நிதியின் கீழ் மேற்கொள்வதாக அமைச்சர் மூலமான கடிதம் அனுப்பப்பட்டது. மூன்று வேலைகளில் ஒரு வேலை இன்னும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணத்தினை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்;.

22. போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் தரை திபுலாணை பகுதியில் அமையப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

23. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பட்டிப்பளை பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக இலங்கை மின்சார சபைக்கான அலுவலகம் நிர்மாணிப்பது தொடர்பாக திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை காலமும் அதற்கான எந்தவித ஏற்பாடுகளும் மேற்n;காள்ளப்படவில்லை. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

24. மண்முணை தென்மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் மகிழடித்தீவு இறால் பண்ணைகளின் சில தெரிவுகள் பற்றி சில கேள்விகள் மக்களால் எழுப்பப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட சில பயனாளிகள் பொருத்தமற்றவர்கள் எனவும் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஆராய்ந்து சரியான பயனாளர்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

25. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடுவில் ஊர்காவற்படையினருக்கு தலா 3 ஏக்கர் வீதம் வனவளத்திற்கு சொந்தமான காணி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இத்திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்n;காள்ள வேண்டும்.

26. மண்முணை தெற்கு, மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை பிரதேசத்தில் ஆரம்ப சிகிச்சைக்கான பராமரிப்பு பிரிவை (Pஆஊரு) அமைப்பதற்கான நடவடிக்கையினை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும்.

27. மண்முணை மேற்கு, வவுணதீவு எல்லைக்குட்பட்ட நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைத் திட்டத்தின் ஒரு பகுதியாக றுழசடன ஏளைழைn சமூக மட்ட அமைப்புக்கு வழங்கப்பட்ட நீர் இணைப்பில் நீர் கசிவு. இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

28. மண்முணை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் ளுழடயச Pயநெட அமைப்பதற்கு பெரியளவில் காணிகள் கோரப்பட்டுள்ளது. இக்காணிகளை வழங்குவதற்கு முன் மன்சார சபையினருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்களா? இக்காணி ளுழடயச pயநெட இற்கு தான் பயன்படுத்தப்படுகின்றதா? காணி அனுமதி வழங்குவதற்கு முன் இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட வேண்டும்.

29. மண்முணை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகிழவட்டவான் கிராமத்தில் அமைந்துள்ள எழுவான் பண்ணையில் சில நபர்களுக்குரிய காணி துண்டுகளும் உள்ளடங்கியுள்ளன. இறுதியாக நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

30. ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கெதிரான உரிய நடவடிக்கை மேற்n;காள்ளல்.

31. ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரையில் கொல்லப்பட்ட பசுக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக மாவட்ட செயலகம் முன்னெடுக்க வேண்டிய பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

32. ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கார்மலை பிரதேசத்தில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல்தரை இதுவரையும் பண்ணையாளர்களுக்காக பிரகடனப்படுத்தப்படவில்லை. இதனை ஆராய்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து பண்ணையாளர்களுக்கு பிரகடனப்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்தல்.

33. ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட களுவங்கேணி- 2 கிராம சேவகர் பிரிவில் உள்ள சீனோர் வீட்டுத்திட்டத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கான காணி உறுதிகள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனை துரித கதியில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும.; (1981 பிரேமதாஸ அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும் போது இவ்வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது.)

34. ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கரடியனாறு, மாவடிச்சேனை பகுதியில் வாழ்கின்ற மக்கள் நிலக்கடலை பயிர்ச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பயிர் செய்கையினை மேற்கொள்வதற்கான அரச காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தோடு நிலக்கடலைக்கான நிர்ணய விலையினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

35. ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் புகையிலை சங்கத்தினருக்கு சொந்தமான காணியினை வழங்குவதற்க மாநகர சபையினால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பிரச்சினையை தீர்த்து அவர்களுக்கான காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

36. மண்முணை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திராய்மடு சுவிஸ் கிராமத்தில் அரச காணியில் வாழும் மக்களுக்கான உறுதி இதுவரை கிடைக்கப் பெறவில்லை. அவர்களுக்கான உறுதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

37. மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாந்தீவு என அழைக்கப்படும் காணியில் சிறைச்சாலைக்கு பயன்படுத்துவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. இது மாவட்டத்தின் வளமாகவும், பறவைகளின் சரணாலயமாகவும் அமைந்துள்ளதனால் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அனுமதி வழங்க முடியாது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

38. மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடையில் கீரியோடை எனும் இடத்தில் சட்டவிரேரதமான முறையில் உரிய அனுமதிகள் பெறப்படாமல் ஆற்றங்கரை அண்டிய பகுதிகளில் மீன்வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக ஆராயப்பட வேண்டும்.

39. கோறளைபற்று வடக்கு, வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்ட வட்டவான் பகுதியில் இறால்பண்ணை கழிவு நீரை காயங்கேணி வாவியில் திறந்து விடுவதனால் இவ்வாவியினை நம்பியுள்ள மீனவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

40. கோறளைபற்று வடக்கு, வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்ட கதிரவெளி பகுதியில் அல்கெமி ஹெவி மெடல் தனியார் நிறுவனத்தினால் சட்டவிரோதமான முறையில் இல்மணைற் மணல் அகழ்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

41. கோறளைபற்று வடக்கு, வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்ட பகுதிகளில் காணி நில அபகரிப்பு இடம்பெறுகின்றது. இது விரைவாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

42. கோறளைபற்று வடக்கு, வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்ட காயங்கேணி கிராமசேவகர் பிரிவில் கடற்கரைக்கு அண்மையில் அமைந்துள்ள மட்ஃகாயங்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தின் (தற்போது பிரதான வீதியில் அமைந்துள்ளது) கட்டடம் மற்றும் மக்களின் காணிகள் பாதுகாப்புப் படையினர் அவர்களின் முகாமாக பயன்படுத்தி வருவதோடு, மீனவ படகுகளை கரையோரமாக நிறுத்த வேண்டாம் எனவும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் மீனவ மக்களால் கூறப்படுகின்றது. இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

43. கோறளைபற்று, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்;ட கும்புறுமூலை கிராம சேவையாளர் பிரிவில் மெண்டிஸ் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் 3முஅ நீளமான தோணாவில் கலப்பதனால் மீன்கள் அனைத்தும் இறந்த நிலையில் காணப்பட்டது. இதனால் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இப்பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மெண்டிஸ் கம்பனி சரியான அனுமதியினை பெற்று செயற்படுகின்றதா? என சந்தேகம் வருகின்றது. இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட வேண்டும்.

44. கோறளைபற்று, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நாசிவன்தீவு கிராம சேவகர் பிரிவில் முறையான குறித்த பகுதியில் வாழும் மக்களுக்கு குழாய்நீர் இணைப்பு இதுவரையில் வழங்கப்படவில்லை. இருந்தும் சட்டவிரோதமாக திணைக்கள அனுமதியின்றி நிலத்தடி நீரைப் பயன்படுத்தி ஐஸ் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

45. கோறளைபற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நெல்கல்மலை எனும் இடத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்குள் சட்ட விரோதமான முறையில் விகாரை அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த பூரணை தினமான 25.01.2024 அன்று இராணுவத்தினரால் அதிகளவான சனத்தொகையினை கொண்டு வந்து விகாரை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்விடயம் சட்டரீதியாக நிறுத்தப்பட வேண்டும்.

46. கோறளைபற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு வாகனேரி பிரதேசத்தில் சீக் எனேர்ஜி பிரைவட் லிமிடட் நிறுவனத்தினால் சூரிய சக்தி மின்திட்டத்திற்காக 352 விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் வயல்காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

47. கோறளைபற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது. இது தொடர்பாக களவிஜயம் 28.03.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக தெளிவு படுத்தும்படியும் கேட்டுக் கொள்கின்றேன்.

48. கோறளைபற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் கிறவல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கிறவலுக்குரிய தேவைப்பாடுகள் என்ன என்பதை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

49. மண்முணை பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஏரிக்குளம் உட்பட சில குளங்கள் மூடப்பட்டு நில அபகரிப்பு இடம்பெறுகின்றது. இந்நிலங்களை தனியார் உரிமை கோருவதாகவும் இது சட்ட நடவடிக்கையாக இருப்பதாகவும் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

50. மண்முணை பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா கிழக்கு கிராம சேவகர் பிரிவில் அரச காணி வழங்கப்பட்டவர்களுக்கான காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படவில்லை. இதனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

51. மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு;யானைகளின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் மனித உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றது. எனவே யானை வேலிகளை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். (குறிப்பாக போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தளவாய், ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கறுத்தப்பாலம் பகுதியில்)

52. மாவட்டத்தில் நீர்குழாய் இணைப்புக்கள் பற்றாக்குறையாக உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

53. மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கான வெள்ள அனர்த்த காப்புறுதி நஷ்டஈடு 2023, 2024 இற்கு உரியது இதுவரையில் வழங்கபபபடவில்லை. வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

54. மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைகள் சம்பந்தமாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் தொடர்பு கொண்டபோது உள் வீதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கு போதியளவான நீர் குழாய்கள் இல்லாமல் இருப்பதாக தெரியப்படுத்தினார். பிற மாவட்டத்தில் மேலதிக உள்ள குடிநீர் குphய்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

55. வாகரையில் அமையப் பெற்றுள்ள கடற்கரையை அண்டிய இராணுவ முகாம், மற்றும் முறக்கொட்டாஞ்சேனை, பாலையடிவட்டை, தாண்டியடி போன்ற இராணுவ முகாம்கள், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையம் ஆகியவற்றிற்கு அரச காணியினை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்;.

என்பன ஆகும்.

No comments: